×

வெஜிடபிள் கொத்து பரோட்டா

தேவையானவை :

தயாரித்த பரோட்டாக்கள் – 6
கேரட் – 2
தக்காளி – 2
பீன்ஸ் – 50 கிராம்
முட்டைகோஸ் – 100 கிராம்
உருளைக் கிழங்கு – 1
மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
தனியாத் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 3 சிட்டிகை
பெரிய வெங்காயம் -1
பச்சை பட்டாணி (உரித்தது) – 50 கிராம்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 50 மில்லி லிட்டர்

செய்முறை:

பரோட்டாக் களை சமையலறை கத்தரிக் கோலால் (Kitchen Scissors), சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் அல்லது கையினால் பிய்த்துப் போட்டுக் கொள்ளவும்.

காய்கறி மஸாலா தயாரிப்பதற்கு:

கேரட், உருளைக் கிழங்கு, பீன்ஸ், முட்டைகோஸ் இவற்றை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். அதன்பின் காய்கறிகள், பட்டாணி போட்டு வதக்கி, சிறிதளவு தண்ணீர் ஊற்றவும். தனியாத் தூள், மிளகாய்த் தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டுக் கிளறவும். காய்கறிகள் வெந்து, தண்ணீர் ஊற்றி கெட்டியானதும், மீதமுள்ள எண்ணெய் ஊற்றி பரோட்டா துண்டுகளைப் போடவும். பரோட்டா துண்டுகளும், காய்கறி மஸாலாவும் நன்றாக கலந்து வதங்கியதும் இறக்கி பரிமாறவும்.

The post வெஜிடபிள் கொத்து பரோட்டா appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...